2011-10-01 15:08:51

ஒரிசா மறைசாட்சிகளுக்கு நீதி-கிறிஸ்தவர்கள் கோரிக்கை


அக்.01,2011. மேலும், இந்தியாவில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு நீதி கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத் தலைவர் Sajan K. George.
“ஒரிசா மறைசாட்சிகளுக்கு நீதி” கேட்டு தேசிய மனித உரிமைகள் அவைக்குக் கடிதம் அனுப்பியதற்கான காரணத்தை விளக்கிய ஜார்ஜ், கிறிஸ்தவர்களின் துன்பங்கள் தேசிய அரசியல் வட்டத்திலிருந்து மறைந்து போகக் கூடாது என்பதற்காகவே இக்கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிய பின்னரும், உள்ளூர் கிறிஸ்தவர்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஓரங்கட்டப்படுதல், தரமான எதிர்காலத்தை அமைக்க முடியாமல் கஷ்டப்படுதல் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள் என்று ஜார்ஜ் ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் கணிப்புப்படி, 2005க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராய் 4,000த்திற்கு அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.