2011-10-01 15:08:32

உலகில் மத சுதந்திரத்துக்காக கிறிஸ்தவர்களே அதிகம் நசுக்கப்படுகின்றனர் கர்தினால் எர்டோ


அக்.01,2011. இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் தங்களது மதச் சுதந்திரத்துக்காக அதிகம் நசுக்கப்படுகின்றனர், இது கவலை தருவதாக உள்ளது என்று ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் தலைவராகிய புடாபெஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் எர்டோ தெரிவித்தார்.
அல்பேனியாவின் திரானாவில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் எர்டோ, சனநாயக அரசுகளும் ஐரோப்பிய சமுதாய அவையும், சமயச் சுதந்திரத்தை மதிக்காத நாடுகள் மீது மிகுந்த அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
உலகின் பல்வேறு பாகங்களில் விசுவாசத்திற்காகத் துன்புறும் கிறிஸ்தவர்களை நினைப்பதாகக் கூறிய கர்தினால் எர்டோ, இவர்களுடன் ஐரோப்பியத் திருச்சபை மிக நெருக்கமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
ஊடகங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களில் கிறிஸ்தவத்திற்கு எதிரான போக்கு, திட்டமிட்டுப் பரவி வருவதாகவும் இவை அனைத்திலும் கிறிஸ்தவ விசுவாசமும் திருச்சபையும் நியாயமற்று நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்த நான்கு நாள் கூட்டமானது இஞ்ஞாயிறன்று நிறைவடைகிறது.








All the contents on this site are copyrighted ©.