2011-09-29 15:34:21

சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன - WHO அறிக்கை


செப்.29,2011. உலக நகரங்கள் அனைத்திலும் மிக அதிக அளவில் சுற்றுச்சூழல் சீர்குலைந்த நகரங்கள் ஆசியாவிலும் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் உள்ளன என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
கட்டுக்குட்படாத வேகத்துடன் பரவி வரும் இயந்தர மயமாக்கலின் விளைவாகவும், வாகனங்களின் பெருக்கத்தாலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் சுவாசிக்கும் காற்று மிக அதிக அளவில் மாசுபட்டுள்ளது என்று WHO நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
புது டில்லி, இஸ்லாமாபாத், பெய்ஜிங் ஆகிய நகரங்கள் அதிக மாசடைந்துள்ள நகரங்களில் முதல் 10 இடங்களில் உள்ளன என்று இவ்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 13 இலட்சம் மக்கள் இறக்கின்றனர் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சார்ந்தோர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.