2011-09-23 17:05:16

யூதமதப் பிரதிநிதிகளிடம் திருத்தந்தை


செப்.23,2011. ஐரோப்பிய யூதர்களை அழிப்பதற்கானத் திட்டம் இந்த Reichstag கட்டிடத்தில்தான் உருவானது. விவிலியக் கடவுளின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்பிய “எல்லாம்வல்லவர்” போன்று நோக்கப்பட்ட அடால்ஃப் ஹிட்லர் ஒரு புறவின வழிபாட்டுச் சிலை. மனிதன் கடவுளைப் புறக்கணிக்கும் போது அவனால் என்ன செய்ய முடியும் என்பதை இரண்டாம் உலகப் போரின் முடிவில் வதைப்போர் முகாம்களின் உருவங்கள் காட்டின. எனினும், தற்போது ஜெர்மனியில் யூதர்களின் வாழ்க்கை மலர்ந்து வருகின்றது. கிறிஸ்தவர்களும் யூத மதத்தோடு கொண்டுள்ள பிணைப்பை உணர்ந்து வருகிறார்கள். கத்தோலிக்கத் திருச்சபைக்கும் யூத மதத்திற்கும் இடையேயான உரையாடல் வலுவடைந்து வருகிறது. வளர்ந்து வரும் சமயச் சார்பற்ற உலகில், கடவுள் மீதான நமது பொதுவான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட இவ்வுரையாடல் உதவ வேண்டும். இந்நம்பிக்கையின்றி சமுதாயம் தனது மனிதத் தன்மையை இழந்து விடும்.இவ்வாறு ஜெர்மனியில் யூதமதப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.