2011-09-23 17:11:35

திருமணச் சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம்


செப் 23, 2011. அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருமணச் சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிட முயலும் அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவின் செயல் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன்.
திருமணத்தின் புனிதத்துவத்தை குறைவாக மதிப்பிட முயல்வது, அமெரிக்க மக்கள் ஒழுக்க ரீதிக் குருடர்களாக உள்ளார்கள் என அரசுத்தலைவர் தவறாகக் கணிப்பது போல் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார் அவர்.
ஒரு தாயாலும் தந்தையாலும் அன்புச் செய்யப்படவேண்டியதை எதிர்பார்க்கும் உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளது என்ற பேராயர் டோலன், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஐக்கியமாக இருக்கும் திருமணமே குழந்தைகளுக்கும் பொதுநலனுக்கும் உகந்தது எனவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.