2011-09-23 17:12:33

சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட மத்தியப்பிரதேச ஆளுனரிடம் விண்ணப்பம்


செப் 23, 2011. இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்பீடுகளும், தனிமதச்சார்பற்ற நிலைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என மத்திய பிரதேசப் புதிய ஆளுநனரிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் அம்மாநில மதத்தலைவர்கள்.
புதிய ஆளுனர் ராம் நரேஷ் யாதவைச் சந்தித்த அம்மாநில இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் புத்த மதத்தலைவர்கள் குழு, நாட்டின் தனிமதச் சார்பற்ற மதிப்பீடுகளும் சிறுபான்மையரின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என விண்ணப்பித்தது.
2004ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கிறிஸ்தவர்கள் மீது நூற்றுக்கும் மேலான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.