2011-09-21 15:29:29

தென் கொரியாவின் ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் இணைந்து முதன்முறையாக வட கொரியவுக்குப் பயணம்


செப்.21,2011. இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் தென் கொரியாவின் ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் முதன்முறையாக வட கொரிய கம்யூனிச நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
KCRP என்ற மதம் மற்றும் நீதிக்கான கொரிய அவையின் அனைத்து ஏழு தலைவர்களும் ஒன்றாக இணைந்து முதன் முறையாகச் சென்றுள்ள இப்பயணத்தில் Pyongyang நகரையும் கொரியத் தீபகற்பத்தில் மிக உயரமான மலையாகிய Baekdusan யும் பார்வையிடுவர்.
இப்பயணம் பற்றிப் பேசிய இவ்வவையின் தலைவர் Kwangju கத்தோலிக்கப் பேராயர் Hyginus Kim Hee-joong, தங்களது இம்முயற்சிகளுக்குத் தென் கொரிய அரசு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
இத்தலைவர்களின் இப்பயணம் இச்சனிக்கிழமை நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.