2011-09-14 15:22:51

லிபியாவில் பொறுப்பேற்றிருக்கும் புரட்சிக் குழுவினரின் நல்ல எண்ணங்களை மதிக்கவேண்டும் - Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி


செப்.14,2011. லிபியாவில் பொறுப்பேற்றிருக்கும் புரட்சிக் குழுவினரின் நல்ல எண்ணங்களை மதிக்கவேண்டும் என்றும், அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு தவறான அர்த்தங்கள் கற்பிக்கக்கூடாதென்றும் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி கூறினார்.
இத்திங்கள் இரவு பல்லாயிரம் மக்களுக்கு முன்னிலையில் பேசிய லிபியாவின் இடைக்கால அரசுக் குழுவின் தலைவர் Mustafa Abdel Jalil, நாட்டில் அமைக்கப்படும் புதிய அரசு இஸ்லாமியக் கொள்கைகள் கொண்டதாக இருக்கும் என்றும், அதே நேரம் அடிப்படை வாதக் கொள்கைகளுக்கு இடம் தராது என்றும் வாக்களித்தார்.
புதியத் தலைவர் Jalil பற்றி தன் கருத்துக்களை வெளியிட்ட ஆயர் மார்த்தினெல்லி, Jalil நல் மனம் கொண்டவர் என்றும், நாட்டை முன்னேற்றப் பாதையில், புதியதோர் எதிர்காலம் நோக்கி நடத்திச் செல்லக் கூடியவர் என்றும் கூறினார்.
உடல்நலக் குறைவால் தற்போது இத்தாலியில் உள்ள ஆயர் மார்த்தினெல்லி, இவ்வியாழனன்று மீண்டும் Tripoliக்குத் திரும்புவதாகவும், அங்கு புதியத் தலைவர் Jalilஐச் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.