2011-09-10 15:22:54

பாகிஸ்தானில் கொட்டும் மழையால் சுமார் ஐம்பது இலட்சம் பேர் பாதிப்பு


செப்.10,2011. பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் சுமார் ஐம்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுக் காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.
தெற்குப் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில் ஒரு நாளில் 166 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளதாகவும் பாகிஸ்தான் காரித்தாஸின் பேரிடர்த் துடைப்பு ஒருங்கிணைப்பாளர் எரிக் தயாள் தெரிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு கோடையில் பெய்த கனமழையில் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்தது. அச்சமயம் காரித்தாஸ் அமைப்பு முதல் 5 மாதங்களில் மட்டும் சுமார் 75 இலட்சம் யூரோக்களைச் செலவழித்தது என்று தயாள் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.