2011-09-09 14:46:05

ஓணம் விழாவையொட்டி மதுபானங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது சரியான போக்கு அல்ல - திருச்சூர் பேராயர்


செப்.09,2011. கேரளாவில் கடந்த பத்து நாட்களாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழாவின்போது, மக்கள் மிக அதிக அளவில் மதுபானங்களைப் பயன்படுத்தியுள்ளது வேதனை தருகிறதென்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கூறினார்.
ஓணம் விழாவையொட்டி அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்ட திருச்சூர் பேராயர் Andrews Thazhath, ஒவ்வோர் ஆண்டும் மதுபானங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது சரியான போக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஓணம் விழாவையொட்டி, 160 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் விற்கப்பட்டன என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17.6 விழுக்காடு அதிகம் என்றும் UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
மதுபானமற்ற ஓணம் கொண்டாடப்பட முடியும் என்பதை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேராயர் Thazhath கூறியுள்ளதை கேரளாவின் அமைச்சர்களில் ஒருவரான K.பாபு பெரிதும் வரவேற்றுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.