2011-09-08 15:48:11

சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவர் கைது: கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு


செப்.08,2011. கர்நாடகாவில் சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த இருவரை காவல் துறையினர் இச்செவ்வாயன்று கைது செய்துள்ளதை கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
கர்நாடகாவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் Gali Janardhana Reddyயும், Obulapuram சுரங்கத் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் Srinivas Reddyயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாநோன்பு போராட்டத்திற்குப் பின், உயர் நிலையில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அநியாயமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்களது தயவிலேயே பெல்லாரி பகுதியின் பெரும்பாலான ஏழை மக்கள் வாழும் கட்டாயம் உள்ளது என்று கர்நாடகா ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Faustine Lobo கூறினார்.
சுரங்கத் தொழிலில் ஈடுபட 2006ம் ஆண்டு வரை மட்டுமே கொடுக்கப்பட்ட உத்தரவை ஏமாற்று வழிகளில் 2017ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளனர் என்று மறைமாவட்டத்தின் நிதித் துறையில் பணிபுரியும் அருள்தந்தை அன்டனி ராஜ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.