2011-09-05 14:31:20

கர்தினால் தெஸ்குரின் மரணத்தையொட்டி திருத்தந்தையின் இரங்கற்தந்தி


செப்.05, 2011. சமூகத்தொடர்புக்கானld திருப்பீட அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Andrzej Maria Deskur, இறைபதம் அடைந்ததைத்தொடர்ந்து, போலந்து தலத்திருச்சபைக்குld தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
போலந்தின் Krakow கர்தினால் Stanislaw Dziwiszக்கு திருத்தந்தை அனுப்பியுள்ளஇரங்கற் தந்தியில், கர்தினால் தெஸ்குரின் பணிகளை வெகுவாகப் பாராட்டியுள்ளதுடன், அவரின் மரணத்தால் துன்புறும் அனைவருடன் ஒருமைப்பாட்டை அறிவித்து செபத்திற்கான உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
1924ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29ந்தேதி போலந்தில் பிறந்த கர்தினால் தெஸ்குர், 1952ல் இளங்குருவாக இருந்தபோதே திருப்பீடச் செயலகத்தில் பணிபுரிய அழைக்கப்பட்டு அதன்பின் திருப்பீடத் தலைமையகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சமூகத்தொடர்புக்கானத் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றியுள்ள இவர், வெரித்தாஸ் வானொலியின் ஆசிய ஒலிபரப்பு மேம்பாட்டிற்காக அதிக ஊக்கமளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1985ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் இவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
சனியன்று காலமான கர்தினால் தெஸ்குரின் அடக்கச் சடங்கு இச்செவ்வாய் காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இடம்பெறும்.








All the contents on this site are copyrighted ©.