2011-09-05 14:37:06

அரசுக்கும், பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடர்வதற்கு பிலிப்பின்ஸ் தலத்திருச்சபையின் முயற்சிகள் தேவை


செப்.05,2011. பிலிப்பின்ஸ் அரசுக்கும், பொதுவுடைமை புரட்சியாளர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடர்வதற்கு, பிலிப்பின்ஸ் தலத்திருச்சபை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று NDFP என்ற அந்நாட்டின் பொதுவுடைமை புரட்சியாளர்களின் கட்சி ஒன்று பரிந்துரை செய்துள்ளது.
தலத் திருச்சபைப் பிரதிநிதிகளும், அமைதி விரும்பிகளும் அண்மையில் Quezon நகரில் நடத்திய ஒரு கூட்டத்தில் பேசிய NDFP கட்சியின் தலைவர் Luis Jalandoni இவ்வாறு கூறினார்.
பெரும்பாலான பிலிப்பின்ஸ் மக்கள் விரும்பும் இந்தப் பேச்சு வார்த்தைகளை தலத் திருச்சபை அதிகாரிகளும், ஏனைய அமைதி ஆர்வலர்களும் அரசிடம் வலியுறுத்துவது அவர்கள் கடமை என்று புரட்சியாளர்களின் தலைவர் Jalandoni கூறினார்.
அரசுக்கும் பொதுவுடைமைப் புரட்சியாளர்களுக்கும் இடையே நார்வே நாட்டின் தலைநகர் Osloவில் இம்மாதம் 12 முதல் 14 வரை அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ளன.







All the contents on this site are copyrighted ©.