2011-09-02 14:37:59

நேபாளத்தில் சிறுபான்மை மக்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - இந்துப் பெண்கள் அரசிடம் வலியுறுத்தல்


செப்.02,2011. நேபாளத்தில் அரசையும் மதத்தையும் இணைக்க வேண்டாம் என்றும், சிறுபான்மை மக்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டின் இந்துப் பெண்கள் அரசைக் கேட்டுக்கொண்டனர்.
இவ்வியாழனன்று நேபாளத்தில் சிவன் கடவுளுக்கென கொண்டாடப்பட்ட Teej திருவிழாவில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியப் பெண்களும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டிருந்ததென்றும், இந்த விழாவையொட்டி, அரசுக்கு இந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டதென்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
நேபாளத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றனர் என்றும் மத சார்பற்ற அரசே மக்களை நல்வழியில் கொண்டு செல்ல முடியும் என்றும் இந்து கலாச்சார ஆய்வாளர் Binda Pudel கூறினார்.
தற்போது நேபாள பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், கிறிஸ்து பிறப்பு விழா, இரமதான் போன்ற சிறுபான்மையினரின் விழாக்கள் தடை செய்யப்படும் ஆபத்து உள்ளதென்று ஆசியச் செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.