2011-09-02 14:36:18

குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான ஐ.நா. திட்டத்திற்குப் பிலிப்பைன்ஸ் பேராயர் வரவேற்பு


செப்.02,2011. பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கு நிதியுதவி செய்வதை ஐக்கிய நாடுகள் நிறுவனம் நிறுத்திக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அந்நாட்டுப் பேராயர் Ramon Arguelles.
ஐ.நா.வின் இத்தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள் உண்மையாய் இருந்தால் இது மிகவும் நல்ல செய்தி என்று, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் மனித வாழ்வு பணிக்குழுத் தலைவர் பேராயர் Arguelles கூறினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கென ஐ.நா. வழங்கும் நிதியுதவி ஊழல் செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது, மாறாக இவ்வுதவி வேறுபல முக்கியமான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றார் பேராயர்.
பிலிப்பைன்ஸ் நாட்டுக் குடும்பக் கட்டுபாட்டுத் திட்டத்திற்கு ஐ.நா. அளித்து வரும் பத்து இலட்சம் டாலர் நிதியுதவியை அடுத்த ஆண்டிலிருந்து நிறுத்த எண்ணியிருப்பதாக பிலிப்பைன்ஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இப்புதனன்று அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.