2011-09-01 15:54:51

இரமதான் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் லிபிய மக்கள் சமாதானத்தையும் ஒப்புரவையும் நோக்கிச் செல்வது மனதுக்கு நிறைவளிக்கிறது - ஆயர் மார்த்திநெல்லி


செப்.01,2011. லிபியாவின் தலைநகர் Tripoliக்கும் துனிசியாவுக்கும் இடையே உள்ள சாலைத் தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி நம்பிக்கையைத் தருகிறது என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்திநெல்லி கூறினார்.
மருத்துவச் சிகிச்சைக்கென இத்தாலி வந்துள்ள ஆயர் மார்த்திநெல்லி, லிபியாவில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து தன் குருக்களுடன் தொடர்பு கொண்டு வருவதாக FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இரமதான் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து லிபிய மக்களும் சமாதானத்தையும் ஒப்புரவையும் நோக்கிச் செல்வது மனதுக்கு நிறைவளிக்கும் ஒரு செய்தி என்று கூறிய ஆயர் மார்த்திநெல்லி, விரைவில் தான் லிபியா சென்று அம்மக்களிடையே இருப்பதையே எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.