2011-09-01 15:54:37

இந்தியாவின் ஐந்து பேராயர்களைத் கோடைவிடுமுறை இல்லத்தில் திருத்தந்தை சந்தித்தார்


செப்.01,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி இந்தியாவிலிருந்து உரோம் நகர் வந்துள்ள ஐந்து பேராயர்களை இவ்வியாழனன்று காலை திருத்தந்தையரின் கோடைவிடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்திய ஆயர்களைச் சந்தித்து வந்த திருத்தந்தை, இருமாத இடைவெளிக்குப்பின், மீண்டும் 'அட் லிமினா' சந்திப்பைத் தொடரும் வண்ணமாக, இவ்வியாழன் காலை ஐந்து பேராயர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ், நாக்பூர் பேராயர் ஆபிரகாம் விருத்தகுலங்கரா, கோவா-தாமன் பேராயர் Filipe Neri António Sebastião do Rosário Ferrão,
கோவா-தாமன் முன்னாள் பேராயர் Raul Nicolau Gonsalves, காந்திநகர் பேராயர் இஸ்தனிஸ்லாஸ் பெர்னான்டஸ், பெங்களூரு பேராயர் பெர்நார்ட் பிலேசியுஸ் மொராஸ் ஆகியோர் இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்தனர்.








All the contents on this site are copyrighted ©.