2011-08-31 15:43:03

நைஜீரியாவில் இரு குழுக்களிடையே உருவான வன்முறை வேதனையையும், வெட்கத்தையும் தருகின்றது - ஆப்ரிக்க ஆயர் Ignatius Ayau Kaigama


ஆக.31,2011. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் இரு குழுக்களிடையே இத்திங்கள் இரவு உருவான வன்முறை வேதனையையும், வெட்கத்தையும் தருகின்றது என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
திங்கள் இரவு இரமதான் தொழுகைக்கென சென்றிருந்த ஓர் இஸ்லாமியக் குழுவுக்கும், அதேபகுதியில் வழிபாடுகள் மேற்கொள்ள சென்றிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவுக்கும் இடையே உருவான வாக்குவாதங்கள் வன்முறையாக வெடித்ததால் உயிர் இழப்புக்கள், காயங்கள், மற்றும் பொருட்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டன என்று Jos மறைமாவட்ட ஆயர் Ignatius Ayau Kaigama, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நைஜீரியாவில் கடந்த சனிக்கிழமை ஐ.நா.தலைமையகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இன்னும் பதட்டமானச் சூழலே நிலவி வருவதாக FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆயர்கள் என்ற முறையில் அமைதிக்கான அழைப்பையும், வேண்டுகோள்களையும் அனைவரும் விடுத்து வருகிறோம். எனினும், அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வன்முறைகள் தொடராதவாறு பாதுகாக்க வேண்டும் என்று ஆயர் Kaigama வலியுறுத்தினார்







All the contents on this site are copyrighted ©.