2011-08-31 15:38:59

கத்தோலிக்கர்களாகிய நாம் கிறிஸ்துவை உலகறியச் செய்வதற்கு தவறியதற்காக மனம் வருந்த வேண்டும் - திருத்தந்தை


ஆக.31,2011. கத்தோலிக்கர்களாகிய நாம் தொட்டில் குழந்தைகள் போல அடைபட்டு, கிறிஸ்துவை உலகறியச் செய்வதற்கு தவறியதற்காக மனம் வருந்த வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
திருத்தந்தை இறையியல் பேராசிரியராகப் பணியாற்றியபோது, அவர் வழிநடத்தி முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களுடன் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில், கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த திருத்தந்தை, அக்கூட்டத்தின் இறுதியில் அவர்களுடன் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரை வழங்கும்போது இவ்வாறு கூறினார்.
கிறிஸ்து என்ற உண்மையை, அவர் இன்னும் நம்முடன் வாழ்கிறார் என்ற விசுவாசத்தை உலகம் கேட்பதற்கு ஆவலாக இருக்கும் வேளையில், அவ்வுண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு கத்தோலிக்கர்களாகிய நாம் காட்டி வந்துள்ள தயக்கம் பெரும் வருத்தத்திற்குரியதென்று திருத்தந்தை கூறினார்.
கடவுளைத் தேடும் உள்ளத்தைப் பற்றி விவரிக்கும் திருப்பாடல் 63ன் “என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது” என்ற வரிகளை எடுத்துக்கூறி, திருத்தந்தை தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.








All the contents on this site are copyrighted ©.