2011-08-30 14:48:53

திருத்தந்தை பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் மரண தண்டனை முற்றிலும் ஒழிப்பு


ஆக.30,2011. திருத்தந்தை வருகிற நவம்பர் மாதம் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் இச்சூழலில், அந்நாடு மரண தண்டனையை முற்றிலும் ஒழித்துவிட்டதாக அண்மையில் அறிவித்துள்ளது.
இத்துடன் ஆப்ரிக்காவில் மரண தண்டனையை ஒழித்துள்ள 17வது நாடாகவும், உலகில் 74வது நாடாகவும் பெனின் மாறுகிறது.
பெனின் நாட்டில் நற்செய்திப் பணி ஆரம்பமானதன் 150ம் ஆண்டு நிறைவையொட்டி, வருகிற நவம்பர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நாட்டில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.