2011-08-29 15:43:38

வன்முறைக் குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு நேபாள தலத்திருச்சபை எதிர்ப்பு


ஆகஸ்ட் 29, 2011. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டுவரும் நேபாளப் புரட்சிக்குழு ஒன்று அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படும் அபாயம் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளது நேபாளத் தலத்திருச்சபை.
'தேசியப் பாதுகாப்பு இராணுவம்' என்ற பெயருடன் இயங்கிவரும் NDA புரட்சிக் குழு, மதம் தொடர்பான பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க நடக்கும் முயற்சிகள் குறித்து கவலையை வெளியிட்ட ஆயர் அந்தோனி சர்மா, நேபாளத்தின் வளர்ச்சிக்காக இவ்வளவு காலமும் பொறுமையுடன் உழைத்து வரும் கிறிஸ்தவர்கள், அரசின் இந்த நடவடிக்கையினால், ஆதரவற்ற சிறுபான்மையினராக உணர்வதாக தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என வன்முறைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த NDA புரட்சி குழுவின் முன்னாள் தலைவர் இராம் பிரசாத் மைனாலி, 2009ல் நேபாளக் கத்திதோலிக்கக் கோவிலைக் குண்டு வைத்துத் தாக்கியது, இரு மசூதிகளைக் குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டது, இந்திய சலேசிய குரு ஜான் பிரகாஷைக் கொலை செய்தது போன்றவைகளுக்காக சிறையிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.