2011-08-29 15:22:25

ஆகஸ்ட் 30 வாழ்ந்தவர் வழியில்..... சுவாமி ஞானப்பிரகாசர்


பன்மொழிப் புலவர். தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தீன், கிரேக்கம் உட்பட பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தவர். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற சிறந்த நூலை வெளியிட்டவர். இத்தனைப் புகழுக்கும் உரியவர் சுவாமி ஞானப்பிரகாசர். வைத்தியலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1875ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பிறந்தார். இவரது ஐந்தாவது வயதில் இவரது தந்தை காலமானார். இதற்குப் பின்னர் இவரது தாய் கத்தோலிக்கர் ஒருவரை மறுமணம் புரிந்தார். அப்போது தாயும் மகனும் கத்தோலிக்கக் கிறிஸ்தவரானார்கள். அச்சமயத்தில் இவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. 1901ம் ஆண்டு டிசம்பரில் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ஊர்காவற்றுறையில் முதல் பங்குக் குருவாகப் பணியாற்றிய போது முதன் முறையாக அவ்வூரில் நூலகம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.







All the contents on this site are copyrighted ©.