2011-08-29 15:42:29

அர்ஜென்டினாவில் கருக்கலைப்பைச் சட்டமாக்கும் முயற்சிகளுக்கு ஆயர்கள் எதிர்ப்பு


ஆக.29,2011. கருக்கலைப்பைச் சட்டமாக்க அர்ஜென்டினா பாராளு மன்றம் தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவாதங்களால் அந்நாட்டு மக்கள் பிரிக்கப்படுவதையும், அவர்கள் மத்தியில் வன்முறைகள் வளர்வதையும் குறித்து தங்கள் கவலைகளையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
கருவுற்றுள்ள பெண்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, ஓர் உயிர் அல்ல, இரு உயிர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றும், இரு உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் Buenos Aires பேராயர் கர்தினால் Jorge Bergogolio கூறினார்.
பெண்கள் கருவுற்றபின், மூன்றாம் மாதம் துவங்கி குழந்தைக்கான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று அரசு அண்மையில் வலியுறுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டிய ஆயர்கள், கருக்கலைப்பைச் சட்டமாக்குவது குறித்து சிந்திக்கும்போதும், உயிர்களை மதிக்கும் எண்ணங்களுடன் பேச வேண்டும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.