2011-08-27 16:09:58

போஸ்னிய அமைதிக்குப் புதிய அச்சுறுத்தல்கள், ஆயர் எச்சரிக்கை


ஆக.27,2011. போரினால் பாதிக்கப்பட்ட பால்கன் நாடான போஸ்னியாவில் சர்வதேச சமுதாயம் எல்லாருக்கும் நீதியையும் மனித உரிமைகளையும் வழங்கத் தவறியுள்ளதால் அந்நாட்டில் அமைதி மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறினார்.
போஸ்னியாவில் முடிவடைந்த போர் தொடர்புடைய அமைதி ஒப்பந்தமும் அரசியல் அமைப்பும் போஸ்னிய – எர்செகோவினா மக்களாலோ அல்லது நாடாளுமன்றத்தாலோ அமைக்கப்படவில்லை, மாறாக அவை அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டன என்று கூறினார் போஸ்னிய ஆயர் பேரவைச் செயலர் ஆயர் Ivo Tomasevic.
எல்லா இடங்களிலும் அரசியல்வாதிகளுக்கு மிகவும் முக்கியமானது அதிகாரம் என்றும் இவர்கள் மக்களின் பயம் உட்பட அனைத்தையும் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறிய ஆயர் தோமாசெவிச், போஸ்னிய மக்கள் பிற இன மக்களால் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றார்.
1995ல் Daytonல் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் மூலம் போஸ்னியாவின் மூன்றாண்டு காலப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் நாட்டின் கத்தோலிக்கரின் நிலை மோசமாகியுள்ளது என்றார் ஆயர்.







All the contents on this site are copyrighted ©.