2011-08-27 16:02:31

டொரோன்ட்டோ முன்னாள் பேராயர் கர்தினால் அம்புரோஜிச் மரணம்


ஆக.27,2011. கானடா நாட்டு டொரோன்ட்டோ முன்னாள் பேராயர் கர்தினால் அலாய்சியுஸ் அம்புரோஜிச் இறைபதம் அடைந்ததையொட்டித் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டொரோன்ட்டோ பேராயர் தாமஸ் கொலின்சுக்கு இத்தந்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் அம்புரோஜிச், அந்நாட்டுத் திருச்சபைக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளைப் பாராட்டியுள்ளார்.
அத்துடன் அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும், அவரின் மறைவால் வருந்தும் தலத்திருச்சபைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த கர்தினால் அம்புரோஜிச் தனது 81வது வயதில் இவ்வெள்ளிக்கிழமை காலமானார். சுலோவேனியா நாட்டில் பிறந்த இவரது குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது 1948ல் கானடாவுக்குக் குடிபெயர்ந்தது. 1955ல் குருவாகவும், 1976ல் டொரோன்ட்டோ துனண ஆயராகவும் நியமிக்கப்பட்ட இவர், 1998ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் அம்புரோஜிச்சின் மரணத்தோடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 194. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 114







All the contents on this site are copyrighted ©.