2011-08-27 16:04:51

Monterrey நகரில் சூதாட்ட அரங்கம் தீ வைத்து தாக்கப்பட்டதற்குத் திருச்சபை அதிகாரிகள் கண்டனம்


ஆக.27,2011. மெக்சிகோ நாட்டு Monterrey நகரில் சூதாட்ட கேளிக்கை அரங்கம் தீ வைத்து தாக்கப்பட்டதற்குத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுத் திருச்சபை அதிகாரிகள்.
ஆபரணங்கள் தொழிற்சாலை என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட Monterrey நகர் தற்சமயம் திட்டமிட்ட வன்முறைக் கும்பலின் நகரமாக மாறி வருவதாக மேலும் கூறியுள்ளனர் அத்தலைவர்கள்.
இவ்வன்முறைத் தாக்குதல் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்ட Monterrey பேராயர் கர்தினால் Francisco Robles Ortega, குற்றக் கும்பல்கள் செய்வது அனைத்தையும் பார்த்து வருகிறோம், ஆனால் இந்தத் தாக்குதல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றார்.
மெக்சிகோவில் குற்றக் கும்பல்களால் அந்நாட்டின் 15 ஆயிரம் குருக்களில் குறைந்தது ஆயிரம் பேர் மறைமுகமாகவும் குறைந்தது 300 பேர் நேரிடையாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆயர் பேரவையின் பொதுநல உறவு ஆணையச் செயலர் கூறினார்.
மெக்சிகோ அரசுத்தலைவர் Felipe Calderon மூன்று நாள் துக்கம் அனுசரிக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுள்ளார். மேலும், அவர் மெக்சிகோவில் இடம் பெறும் திட்டமிட்ட குற்றக் கும்பலின் வன்முறைச் செயலுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டையும் குறை கூறியுள்ளார். இத்தாக்குதலில் சுமார் 52 பேர் இறந்தனர்.







All the contents on this site are copyrighted ©.