2011-08-26 14:33:44

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னாள் மாணவர்கள் “புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி” குறித்து விவாதித்து வருகின்றனர்


ஆக.26,2011. பேராசிரியராகப் பணிபுரிந்த திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னாள் மாணவர்கள் காஸ்தல் கந்தோல்ஃபோவில் கூடி “புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி” குறித்து விவாதித்து வருகின்றனர்.
இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்த நான்கு நாள் கருத்தரங்கில் வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn, Hamburg துணை ஆயர் Hans-Jochen Jaschke, திருப்பீட கலாச்சார அவைச் செயலர் பேரருட்திரு Barthelemy உட்பட சுமார் 40 பேர் கலந்து கொள்கின்றனர்.
வருகிற அக்டேபர் 15 மற்றும் 16 தேதிகளில் மேற்கத்திய திருச்சபைப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை நடத்தவிருக்கும் கூட்டத்தின் கருப்பொருளான “புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி” குறித்தே தற்சமயம் அவரின் முன்னாள் மாணவர்கள் விவாதித்து வருகின்றனர்.
“Ratzinger Schülerkreis” என்றழைக்கப்படும் இந்தக் கருத்தரங்கு, பேராசிரியராக இருந்த திருத்தந்தை, மியுனிக்கின் பேராயராக நியமனம் செய்யப்பட்ட பிறகு 1977ல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஆண்டுதோறும் இது நடைபெற்று வருகிறது







All the contents on this site are copyrighted ©.