2011-08-25 14:55:43

ஆப்ரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தைப் போக்க அவசரகால கூட்டம்


ஆக.25,2011. Eritrea, Djibouti, Ethiopia, Somalia ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆப்ரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பஞ்சத்தைப் போக்க உலக நாடுகளும், பெரும் நிறுவனங்களும் உடனடியாக முன் வர வேண்டுமென ஐ.நா. உயர் அதிகாரிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இவ்விழாயனன்று ஆப்ரிக்கக் கண்டத்தின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் Addis Ababaவில் அவசரகால கூட்டமொன்றை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், அக்கண்டத்தின் பசி, பட்டினி இவைகளைப் போக்க உலகின் அரசுகள் அனைத்தும் முன் வர வேண்டுமென்று ஐ.நா. அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
‘ஆப்ரிக்காவின் கொம்பு’ என்று வழங்கப்படும் வடகிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் பசி, பட்டினியால் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது துயர் துடைக்கவும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் குறைந்தது ஒரு பில்லியன், அதாவது, 100 கோடி டாலர்கள் அதிகமாகத் தேவைப்படுகிறதென்று ஐ.நா.செய்தியொன்று கூறுகிறது.
பட்டினிக் கொடுமையால் இந்நாடுகளில் இருந்து கென்யா, எதியோப்பியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பிரச்சனைகளும் கூடி வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன.









All the contents on this site are copyrighted ©.