2011-08-24 15:16:39

இமயமலையின் சிகரங்களை அடைவதில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெண் உலகச் சாதனை


ஆக.24,2011. ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் இமயமலையின் சிகரங்களை அடைவதில் இச்செவ்வாயன்று மாலை உலகச் சாதனை படைத்துள்ளார்.
Gerlinde Kaltenbrunner என்ற ஆஸ்திரிய நாட்டுப் பெண் இச்செவ்வாய் மாலை 6 மணி 18 நிமிடங்களுக்கு எவரெஸ்ட் மலை சிகரத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக உயரமான K2 என்ற சிகரத்தை அடைந்தார்.
இமய மலையில் 8000 அடிகளுக்கும் மேலாக உயரமுள்ள 14 சிகரங்களையும் இதுவரை இரண்டு பெண்கள் அடைந்து சாதனை படைத்துள்ளனர். Gerlinde Kaltenbrunner இச்சிகரங்களை அடைந்த மூன்றாவது பெண். ஆயினும் ஆக்சிஜன் கவசங்கள் ஏதும் அணியாமல் இச்சிகரங்களை அடைந்த முதல் பெண் இவரே என்ற அளவில் இவர் உலகச் சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் உட்பட மற்ற 13 சிகரங்களை அடைந்து விட்ட Gerlinde Kaltenbrunner, K2 என்ற இச்சிகரத்தை அடைய ஆறு முறை முயன்றும் வெற்றி பெற முடியாமல், இச்செவ்வாய் மாலை அச்சிகரத்தையும் அடைந்ததால், தான் உலகின் உச்சியில் இருப்பதை போன்ற உணர்வு பெற்றுள்ளதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.