2011-08-24 15:16:05

அனைத்துலக அடிமை வர்த்தகமும் அதன் ஒழிப்பும் என்ற நாளையொட்டி UNESCO தலைமை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை


ஆக.24,2011. அடிமை வர்த்தகம் பற்றிய நமது வரலாற்றை அறிந்து கொள்வது நாம் வாழும் நாட்களில் புதிய, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய வழியாக அமையும் என்று ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக அடிமை வர்த்தகமும் அதன் ஒழிப்பும் என்ற நாளையொட்டி அறிக்கை வெளியிட்ட UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova கூறினார்.
உலகமயமாக்கல் என்ற வழியில் நடைபயிலும் இவ்வுலகம் பன்முகக் கலாச்சாரங்களைக் கொண்ட உலகை அமைக்கும் அவசியத்தில் உள்ளது என்றும், இங்கு அனைத்து வழிகளிலும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்றும் UNESCO இயக்குனர் வலியுறுத்தினார்.
ஆப்ரிக்க வழி வந்த மக்களுக்கான அகில உலக ஆண்டாக 2011 விளங்குவதால், இந்த ஆண்டில் அடிமை வர்த்தகம் குறித்து இன்னும் ஆழமாக நாம் அறிந்து கொள்ளவும், மனித குலம் இழைத்துள்ள பல தவறுகளைக் களையவும் இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்றும் Irina Bokova கூறினார்.
இந்த நாளையொட்டி அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, செனெகல், அர்ஜென்டினா உட்பட பல நாடுகளில் கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஐ.நா.செய்தி ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.