மத்ரித் இளையோர் தினக் கொண்டாட்டங்களில் இளையோரின் நடவடிக்கைகள் குறித்து பெருமைப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது
ஆக 23, 2011. இஸ்பெயின் மத்ரித் இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட இளையோரின்
நடவடிக்கைகள் குறித்து பெருமைப்படுவதாக இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் அறிவித்துள்ளனர். இளையோர்
தினக்கொண்டாட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டவர்களின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும்,
எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இந்நிகழ்வு இடம்பெற்றதும் பெருமைக்குரிய ஒன்றாக இருந்ததாக,
இத்திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக இளையோர் தினத்திற்கான தகவல் தொடர்புத்துறை
இயக்குனர் மரியெத்தா ஹௌரேகுயிசர் அறிவித்தார். இந்த இளையோர்தினக் கொண்டாட்டத்தில்
பங்குபெற்றோர் அனைவரும் நல்லதொரு அனுபவத்தைப் பெற்றுச் சென்றுள்ளதாக தாங்கள் உறுதியாக
நம்புவதாகவும் தெரிவித்தார் அவர். மத்ரித் இளையோர் தினக் கொண்டாட்டங்கள், தாங்கள்
எதிர்பார்த்தததைவிட சிறப்பாக இடம்பெற்றதாக இந்நிகழ்வுக்கு ஏற்பாடுச்செய்தோர் மகிழ்ச்சியை
வெளியிட்டுள்ளனர்.