2011-08-22 15:24:48

பங்களாதேசில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்குவதற்கு முயற்சிகள்


ஆக 22, 2011. பங்களாதேசில் கத்தோலிக்கப் பலகலைக்கழகம் ஒன்றைத் துவக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தலத்திருச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டின் கத்தோலிக்கக் கல்விக்கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு பேராயர்கள், பல குருக்கள், கன்னியர்கள் மற்றும் பொதுநிலையினர் உட்பட ஏறத்தாழ 100 பேரிடையே உரையாற்றிய டாக்காவின் வாரிசுரிமை பேராயர் பேட்ரிக் டி ரொசாரியோ, கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றை நாட்டில் திறப்பது தலத்திருச்சபையின் நீண்ட காலக் கனவாக இருந்து வருகிறது என்றார். பங்களாதேசின் கல்வியாளர்கள் நீண்ட காலமாக விடுத்து வரும் விண்ணப்பம் இதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
பங்களாதேசில் முக்கிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்தி வரும் திருச்சிலுவை துறவு சபையின் நிர்வாகத்தின் கீழ் தலத்திருச்சபையால் உருவாக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகம் 'Notre Dame பல்கலைக்கழகம்' என அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.