2011-08-19 16:41:20

இந்தியாவில் வருகிற ஞாயிறு நீதியின் ஞாயிறாகக் கடைபிடிக்கப்படும்


ஆக.19,2011. இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பணிக்குழு வருகிற ஞாயிறை நீதியின் ஞாயிறாகக் கடைபிடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளையடுத்து வரும் ஞாயிறு நீதியின் ஞாயிறென கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
'உலகமயமாக்கலும் இந்தியாவில் நீதியும்' என்ற கருத்தில் இவ்வாண்டின் நீதி ஞாயிறு கடைபிடிக்கப்படும் என்று இப்பணிக்குழு அறிவித்துள்ளது.
அனைத்து மறைமாவட்டங்களும் இந்த நீதி ஞாயிறைச் சிறப்பான முறையில் கடைபிடிப்பதற்கு உதவியாக, இக்கருத்தை மையப்படுத்திய விளம்பர அட்டைகளையும், பிற பிரசுரங்களையும் ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் அனுப்பியுள்ளதாக நீதி, அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பணிக்குழு தெரிவித்துள்ளது.
உலகமயமாக்கல் என்ற போக்கால் சமுதாயத்தின் விளிம்பில் இருப்போர் சமுதாயம் பெறும் பயன்களிலிருந்து இன்னும் புறம்பே தள்ளப்படுவதை இப்பணிக்குழுவின் பிரசுரங்கள் வலியுறுத்தியுள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.