2011-08-19 16:42:56

Guinea நாட்டில் ஒப்புரவை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள மேல்மட்டக் குழுவின் தலைவராக கத்தோலிக்கப் பேராயர் நியமனம்


ஆக.19,2011. Guinea நாட்டில் ஒப்புரவை உருவாக்கும் முயற்சியாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு மேல்மட்டக் குழுவின் தலைவர்களாக அந்நாட்டின் கத்தோலிக்கப் பேராயர் ஒருவரையும், இஸ்லாமிய மத குரு ஒருவரையும் அந்நாட்டு அரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
Guinea அரசுத் தலைவர் Alpha Conde, பேராயர் Vincent Koulibalyயையும் இஸ்லாமிய மத குரு El Hadj Mamadou Saliou Camaraவையும் தலைவர்களாக நியமித்துள்ளார் என்பதை அந்நாட்டு பிரதமர் இப்புதன் மாலை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் Alpha Conde அரசுத் தலைவராகப் பதவியேற்கும் வரை Guinea நாட்டில் தொடர்ந்து பல சர்வாதிகாரிகள் இராணுவத்தின் துணை கொண்டு ஆண்டு வந்தனர். சர்வாதிகாரிகள் ஆண்ட காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. பல்லாயிரம் பேர் கொலையுண்டனர்.
இக்குற்றங்கள் குறித்து அலசி ஆராயவும், நாட்டில் உள்ள பல இனங்களுக்கிடையே ஒப்புரவு உருவாகவும் அரசுத் தலைவர் Conde உண்மை மற்றும் ஒப்புரவுக்கான குழுவை நியமித்துள்ளதை ஐ.நா.அவை பெரிதும் வரவேற்றுள்ளது.







All the contents on this site are copyrighted ©.