2011-08-18 16:27:40

ஆகஸ்ட் 19 வாழ்ந்தவர் வழியில்....


ரைட் சகோதரர்கள் (Wright brothers) என அறியப்படும் ஓர்வில் ரைட், (Orville Wright), வில்பர் ரைட் (Wilbur Wright) ஆகிய இரண்டு அமெரிக்க சகோதரர்கள், உலகின் முதல் ஆகாயவிமானத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தவர்கள். இவர்கள், 1903ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் முதன்முதலில் பறந்து சாதனை படைத்தவர்கள். விமான ஓட்டுனர், விமானத்தைச் சமநிலையுடன் ஓட்டிச் செல்வதற்கு உதவும் “மூன்று அச்சு கட்டுப்பாட்டு” அமைப்பையும் இவர்கள் கண்டுபிடித்தனர். இந்த அமைப்பு முறையானது எல்லா வகையான விமானங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விமானம் பறக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இச்சகோதரர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இவர்கள் இருவருமே விமானத் தயாரிப்பாளர்கள், விமான ஓட்டிகள், விமானப் பயிற்சியாளர்கள். இந்தச் சகோதரச் சாதனையாளர்களில் ஒருவரான ஓர்வில் ரைட், 1871ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி பிறந்தார். இவர், வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் ஒரு மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார். ஓர்வில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காலமானார்.
1904 மற்றும் 1905 ஆம் ஆண்டுகளில் ரைட் சகோதரர்களின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டன. இந்த ரைட் சகோதரர்கள் இருவருமே திருமணமாகாதவர்கள்.







All the contents on this site are copyrighted ©.