2011-08-16 16:03:34

ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்கிறது ஜெர்மன் குழு


ஆக 16, 2011. பதட்ட நிலைகளுக்கு விரைவில் உள்ளாகும் ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வரை விண்ணப்பித்துள்ளது ஜெர்மன் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு ஒன்று.
கந்தமால் பகுதியில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட ஜெர்மன் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற குழுவுக்குத் தலைமைத் தாங்கிச் சென்ற வோல்கர் கௌடெர் பேசுகையில், ஒரிசா மாநிலைத்தில் கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பு, மீள்கட்டுமானப்பணிகள், தலித் மற்றும் பழங்குடியினரின் நிலைப்பாடு ஆகியவை குறித்து இப்பயணத்தின்போது விவாதித்ததாகக் கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளில் தாக்கப்பட்ட எண்ணற்ற மக்கள் இன்னும் நந்தகிரி புனர் வாழ்வு மையங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து அச்சத்திலேயே வாழ்ந்து வருவதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் அவர்.
வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பலர் இன்னும் தண்டனையின்றி வெளியிலேயே வாழ்ந்து வருவதால், ஒப்புரவிற்கான வாய்ப்புக்கு அது தடையாக இருப்பதாகவும் கூறினார் ஜெர்மன் பாராளுமன்ற குழுவைச் சேர்ந்த கௌடெர்.








All the contents on this site are copyrighted ©.