2011-08-15 14:14:24

சிக்குன் குனியா நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு


ஆக.15, 2011. கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிக்குன் குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ள அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த மருந்து ஆய்வுக்கூடங்களில் எலிக்கு பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றி காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன் குனியா நுண்கிருமியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்து, மனிதர்களில் எவ்விதத்தில் வேலை செய்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின் இதற்கு அனுமதி கிட்டும் எனவும், இந்தத் தடுப்பூசி தயாரிப்புச் செலவு குறைவு எனவும் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்காட் வீவர் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.