2011-08-13 13:57:00

சர்வாதிகாரர்களைத் தூக்கியெறிவதில் இளையோர் “திகைப்பூட்டும்” வகையில் செயல்பட்டுள்ளார்கள் -ஐ.நா.பொதுச் செயலர்


ஆக.13,2011. கடந்த ஆண்டில் சர்வாதிகாரர்களைத் தூக்கியெறிவதில் இளையோர் “திகைப்பூட்டும்” வகையில் செயல்பட்டுள்ளார்கள் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
“நம் உலகை மாற்றுவோம்” என்ற சுலோகத்துடன் ஆகஸ்ட் 12ம் தேதியான இவ்வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக இளையோர் நாளையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலகின் நூறு கோடிக்கு மேற்பட்ட இளையோரில் பலருக்கு கல்வியும் சுதந்திரமும் அவர்களுக்கு உகந்த வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இந்நிலை இருந்த போதிலும், சில விவகாரங்களில், நல்லோர் எதிர்காலத்தை அமைப்பதற்கு இவர்கள் பெருமளவான மக்களைத் தூண்டி வருகிறார்கள் என்று அச்செய்தியில் கூறியுள்ளார் பான் கி மூன்.
ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக பாலியல், இனம், மொழி போன்றவற்றின் பாகுபாடுகளால் துன்புறும் மக்களின் உரிமைகளுக்காக இளையோர் துணிந்து போராடுகிறார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.