2011-08-12 15:12:24

சீனாவில் பாலினப் பாகுபாடு கருக்கலைப்பைத் தடை செய்ய அரசு உறுதி


ஆக.12,2011. சீனாவில் சில மாநிலங்களில் 130 சிறுவர்களுக்கு 100 சிறுமிகள் என்ற விகிதம் இருப்பதாக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து பாலினத்தைத் தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கையைத் தடை செய்வதற்கு அரசு உறுதி அளித்துள்ளது.
“சீனச் சிறாரின் வளர்ச்சிக்கான அரசின் புதிய திட்டம்” என்ற தலைப்பில் அரசு எடுத்து வரும் முயற்சியின் ஒரு கட்டமாக, பாலினப் பாகுபாடு கருக்கலைப்பைத் தடை செய்ய உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தேசிய அளவில் 119 சிறுவர்களுக்கு 100 சிறுமிகள் என்ற விகிதம் இருப்பதாகத் தெரிவித்த, அனைத்துலக மனித வாழ்வு அமைப்பின் Joseph Meaney, சீனாவில் சில மரபு மதங்களில் ஆண்வாரிசுகளே அடக்கச்சடங்குகளை நிறைவேர்ற முடியும் என்பதால் ஆண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றார்.








All the contents on this site are copyrighted ©.