2011-08-12 15:15:04

இலங்கையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்படுவதற்கு சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தல்


ஆக.12,2011. இலங்கையில் கடந்த இருபது ஆண்டுகளில் இருபதாயிரத்துக்கு அதிகமான விவசாயிகள் இறப்பதற்குக் காரணமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்படுவதற்கு ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விவசாய நிலங்களில் தூவப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் அரிதார நஞ்சு, சையனைட், பாதரசம் போன்ற நச்சுப்பொருட்கள் முதலில் நினைத்ததைவிட அதிக அளவில் கலந்துள்ளதாக அவ்வமைப்புக் கூறியது.
மலேசியாவில் செய்யப்பட்ட பரிசோதனைக்கூட ஆய்வுகள், இலங்கையில் முன்பு செய்த ஆய்வுகளை உறுதி செய்துள்ளன என்று சொல்லி இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகள் உடனடியாகத் தடை செய்யப்படுமாறு, நச்சுப்பொருட்களுக்கு எதிரான இலங்கை தேசிய இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.