2011-08-12 13:54:47

ஆகஸ்ட் 13. வாழ்ந்தவர் வழியில் ....


ஆங்கில எழுத்தாளர் H. G. Wells, இங்கிலாந்தின் புரோம்லேயில் 1866 செப்டம்பர் 21ந் தேதி பிறந்தார். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிவியல் சார்ந்த படைப்புகளாலேயே அறியப்படுகிறார்.
இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்தியக் காலகட்டத்தில் (1900-1920), கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிவியல் பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட இராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள், இவருக்குப் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் H. G. Wells, 1946ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.