2011-08-10 15:23:08

சீனாவில் ஆரம்பமாகும் Universiadeக்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்க சீனத் தலத்திருச்சபை தயார்


ஆக.10,2011. ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று தென் சீனாவின் Shenzhen நகரில் ஆரம்பமாகும் Universiade, அதாவது, அனைத்துலக பல்கலைக்கழக வீரர்களின் விளையாட்டுப் போட்டிகளையொட்டி, சீனாவிற்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்க சீனத் தலத்திருச்சபை தயாராக உள்ளது.
ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ள அனைத்துலக பலகலைக் கழகங்களின் கோடை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தினமும் ஆங்கிலத் திருப்பலிகளும் பிற செப வழிபாடுகளும் நடைபெறுவதற்கு Shenzhen நகரின் பல பங்குத்தளங்கள் உதவி செய்ய முன் வந்துள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைகழகங்களிலிருந்து 12000 வீரர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும், இவர்களில் 8000க்கும் அதிகமானோர் கத்தோலிக்கர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பல்வேறு மதங்களின் சேவைகள் நாள் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று 2008ம் ஆண்டு Beijing ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நேரத்தில் பணி செய்த அருள்தந்தை Paul Liu Zhentian கூறினார்.








All the contents on this site are copyrighted ©.