2011-08-09 15:10:29

உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இஸ்பெயின் பொருளாதாரத்திற்கு உதவும் - அரசு அதிகாரி


ஆக.09,2011. இம்மாதம் திருத்தந்தையுடன் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் உலக இளைஞர் கொண்டாட்டங்கள் மூலம் இஸ்பெயின் நாட்டிற்கு 14 கோடியே 30 இலட்சம் டாலர் வருமானம் கிட்டும் என நம்புபுவதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் வீட்டு வசதி மற்றும் பொருளாதார அலுவலகத்தின் தலைவர் பெர்சிவால் மங்ளானோ.
இத்தகைய கொண்டாட்டத்தினால் இஸ்பெயின் அரசுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற சிலரின் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த மங்ளானோ, பல இலட்சக்கணக்கான இளைஞர்களின் வருகை, இஸ்பானிய பொருளாதாரத்திற்கு நன்மையாகவே இருக்கும் என்றார்.
இஸ்பானிய அரசு இவ்விளைஞர் தினக்கொண்டாட்டங்களுக்கு நேரடியாக எவ்விதப் பொருளாதார உதவிகளும் செய்யாத நிலையில் தனியார் அமைப்புகளே இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றன







All the contents on this site are copyrighted ©.