2011-08-06 14:57:30

மிசியோ ஆஸ்ட்ரியாவின் உதவியால் 45 இலட்சம் நோயாளிகள் பயனடைவர்


ஆக.06,2011. உலகின் சுமார் 45 இலட்சம் தொழுநோயாளிகள் பயனடையும் விதத்தில் மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது “மிசியோ ஆஸ்ட்ரியா” என்ற ஆஸ்ட்ரியாவிலுள்ள தேசிய பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் அமைப்பு.
தொழுநோயை ஒழிப்பதற்கும் தொழுநோயாளிகளின் நலவாழ்வுக்குமென 2010ம் ஆண்டில் 72 திட்டங்களை ஊக்குவித்துள்ளது இந்த ஆஸ்ட்ரிய அமைப்பு.
இவ்வாண்டில் மட்டும் ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள 29 மறைபோதக மருத்துவமனைகளுக்கு 3,200 பெட்டிகளில் மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இவ்வமைப்பு அனுப்பியுள்ளது. இதனால் சுமார் 45 இலட்சம் பேர் பயனடைவார்கள்.
தொழுநோயை ஒழிப்பதற்கென கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது இந்த ஆஸ்ட்ரிய அமைப்பு







All the contents on this site are copyrighted ©.