2011-08-06 14:58:33

புர்கா அணியத் தடைவிதிப்பது, தனிப்பட்டவரின் சமய சுதந்திரத்தை மீறுவதாக இருக்கின்றது


ஆக.06,2011. பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா, நிகாப் அணிவதற்குத் தடைவிதிக்கும் மசோதாவுக்கு இத்தாலிய நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புக் குழு அங்கீகாரம் அளித்திருப்பது, சமய சுதந்திரத்தை மீறுவதாக இருக்கின்றது என்று இந்தியத் திருச்சபையின் சமூகநல ஆர்வலர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது, ஆழமான கலாச்சார நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும் தனிப்பட்டவரின் வாழ்வில் நேரிடையாகத் தலையிடுவதாக இருப்பதால் தனிப்பட்டவரின் சமய சுதந்திரத்தை இது மீறுவதாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் பிரான்சும் பெல்ஜியமும், இஸ்பெயினில் ஒரு நகரமும் ஏற்கனவே புர்காவுக்குத் தடைவிதித்துள்ளன.
இத்தாலியில் சுமார் மூவாயிரம் பெண்கள் முகத்திரை அணிவதாகக் கூறப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.