2011-08-06 14:56:38

புரட்சிக்குழுக்களால் நடத்தப்படும் ஆள்கடத்தல் செயல்களுக்கு வெனெசுவேலா காரித்தாஸ் இயக்குனர் கண்டனம்


ஆக.06,2011. வெனெசுவேலா நாட்டில் இருந்து கொண்டு ஆள்கடத்தல் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கொலம்பிய நாட்டுப் புரட்சிக் குழுக்களுக்கு எதிராகத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார் வெனெசுவேலா காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி ஒர்லாந்தோ நெய்ரா.
FARC என்ற கொலம்பிய ஆயுதப் புரட்சிப் படையும், ELN என்ற தேசிய விடுதலைப் படையும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத நிறுவனங்கள் என்றும், இவை, ஆள்கடத்தல் மற்றும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் செயல்களால் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளன என்றும் அக்குரு தெரிவித்தார்.
இந்தப் புரட்சிப் படைகளின் அடாவடிச் செயல்களை நிறுத்துவதற்கு அரசு எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குறை கூறினார்.
கொலம்பியாவில் 2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 89 பேர் கடத்தப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.