2011-08-06 15:24:48

ஆகஸ்ட் 07, வாழ்ந்தவர் வழியில்...


இரவீந்தரநாத் தாகூர் (மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) உலகப்புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர். இவர் எழுதிய கீதாஞ்சலி என்ற கவிதை நூல் 1913ம் ஆண்டு இலக்கியத்துக்கான நொபெல் பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஆசிய கண்டத்தில் முதல் நொபெல் பரிசைப் பெற்றவர் இவரே. ‘ஜன கண மன’ என முழங்கும் இந்திய நாட்டுப் பண்ணை இயற்றியவர் இவர். மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைத்தனர்.
கல்கத்தாவில் பிறந்த இரவீந்தரநாத், தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ, அதாவது, சூரிய சிங்கம் என்னும் புனைப் பெயரில் வெளியிட்டார்.
இரவீந்தரநாத் தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகளும், எண்ணங்களும் இவர் எழுதிய ஏராளமான நூல்கள் வழியாகவும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்று இவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் வழியாகவும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த இரவீந்தரநாத் தாகூர், 1941ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ம் தேதி, தன் 80வது வயதில் புகழுடல் எய்தினார்.








All the contents on this site are copyrighted ©.