2011-08-05 15:30:03

நைஜீரியாவில் எண்ணெய் மாசுக்கேட்டைத் துப்புரவு செய்வதற்கு 30 ஆண்டுகள் எடுக்கக்கூடும் – ஐ.நா


ஆக.05,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஒகோனிலாண்ட் எண்ணெய்வளப் பகுதியில் எண்ணெய் எடுப்புத் தொழிற்சாலைகளால் சிந்தப்பட்டுள்ள எண்ணெய்யைச் சுத்தம் செய்வதற்கு 25 முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கக்கூடும் என்று இவ்வியாழனன்று வெளியான ஐ.நா.அறிக்கை கூறுகின்றது.
உலகில் எண்ணெய் மாசுக்கேடு தலைநகர் என்று பெயர் பெற்றுள்ள இந்நாட்டில், எண்ணெய் மாசுகேட்டினால் அசுத்தமடைந்துள்ள குடிநீர், நிலம் மற்றும்பிற சுற்றுச்சூழல் பாதிப்புக்களைச் சரிப்படுத்துவதற்கு முதல் ஐந்தாண்டுகளுக்கு மட்டும் நூறு கோடி டாலர் தேவைப்படும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
நைஜர் டெல்ட்டா பகுதியில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெறும் எண்ணெய் எடுப்புத் தொழிற்சாலைகளால் விவசாயமும் கிணற்று நீரும் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதியப் பொருட்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகின்றது







All the contents on this site are copyrighted ©.