2011-08-05 15:26:10

சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் முதலில் தாய்மார், தந்தையர், மகன்கள் மற்றும் மகள்கள் – அமெரிக்கப் பேராயர்


ஆக.05,2011. சட்டத்துக்குப் புறம்பே குடியேறும் பல குடியேற்றதாரர்கள், தங்களது குடும்பங்களுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் தாயகத்தைவிட்டுக் கட்டாயமாக வெளியேறுகிறார்கள் என்று லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் ஹோசே கோமஸ் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே குடியேறியிருப்பவர்களில் பலர், தங்கள் உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்திருப்பவர்கள் என்றும் பேராயர் கோமஸ் கூறினார்.
Knight of Columbus என்ற அனைத்துலக கத்தோலிக்கத் தொண்டு நிறுவனம் டென்வரில் நடத்திய 129வது மாநாட்டில் உரையாற்றிய பேராயர், சட்டத்துக்குப் புறம்பே குடியேறியுள்ளவர்கள் முதலில் தாய்மார், தந்தையர், மகன்கள் மற்றும் மகள்கள் என்றார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஹிஸ்பானியர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.