2011-08-04 15:08:24

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பொதுவில் கணபதி சிலை வைப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு


ஆக.04,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்துமதக் கடவுளான கணபதி சிலை பொதுவான இடத்தில் வைக்கப்படுவதற்கு பல்வேறு குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு Coeur d’Alene நகரில் பொதுவில் கணபதி சிலை வைக்கப்படுவது குறித்துக் கருத்து தெரிவித்த, நெவாடா பங்குத்தந்தை சார்லஸ் துராந்தே, எமது கத்தோலிக்க விசுவாசம் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்ளவும், ஒருவர் ஒருவரில் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கவும் அழைப்பு விடுக்கின்றது என்றார்.
இந்தச் சிலையை வைப்பதை வரவேற்று யூத, புத்த மற்றும் இந்துமதத் தலைவர்கள் ஏற்கனவே தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.